6 ஊராட்சி பகுதிகளை சேர்க்க அதிகாரிகள் ஆய்வு


6 ஊராட்சி பகுதிகளை சேர்க்க அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2021 6:15 PM GMT (Updated: 27 Aug 2021 6:15 PM GMT)

மானாமதுரையை நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்கப் பணிக்காக சுற்றியுள்ள 6 ஊராட்சிகளில் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மானாமதுரை
மானாமதுரையை நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்கப் பணிக்காக சுற்றியுள்ள 6 ஊராட்சிகளில் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளுடன் இருந்து வருகின்றது. இங்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,017 பேர் உள்ளனர். தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆண்டு வருவாய் ரூ.5 கோடியை கடந்து விட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதுரை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, கவுன்சிலர் அண்ணாத்துரை, மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா ஆகியோர் விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
ஆலோசித்து முடிவு
அவர்கள் மானாமதுரையையொட்டி உள்ள கல்குறிச்சி, கீழமேல்குடி, செய்களத்தூர், மாங்குளம், கீழப்பசலை, சூரக்குளம்-பில்லறுத்தான் ஆகிய ஊராட்சிகளில் எந்தந்த பகுதிகளை மானாமதுரையுடன் இணைக்கலாம் என ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எந்தந்த பகுதிகளை இணைப்பது குறித்து கலெக்டருடன் ஆலோசனை செய்தபிறகு முடிவு செய்யப்படும் என்றனர்.

Next Story