குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கை; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தகவல்
அம்பை தொகுதியில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அம்பை:
அம்பை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நேற்று கலந்தாய்வு நடத்தினார். இதில் அம்பை ெதாகுதியில் உள்ள நகர பஞ்சாயத்துகளின் செயல் அலுவலர்கள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கூறுகையில், ‘அம்பை தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்வது, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில், அவர்களது பணி தொடர வேண்டும்.
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனைபட்டா போன்றவை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்குமாறு அரசு அதிகாரிகளிடம் கேட்டு கொண்டேன். அனைத்து கால்வாய்களிலும் கான்கிரீட் தளம் அமைக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன்’ என்று கூறினார்.
பின்னர் அவர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அம்பை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர் அறிவழகன், கண்ணன், மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவன் பாபு, நகரசபை முன்னாள் துணை தலைவர் மாரிமுத்து, வக்கீல் சுரேஷ், சேரை மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story