கரூரில் சினிமா தியேட்டர்கள் திறப்பு


கரூரில் சினிமா தியேட்டர்கள் திறப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 8:26 PM GMT (Updated: 2021-08-28T01:56:56+05:30)

கரூரில் சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. குறைந்த அளவிலான ரசிகர்கள் வந்ததால், தியேட்டர்கள் வெறிச்சோடியது.

கரூர்,
தியேட்டர்கள் திறப்பு
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதனால் கடந்த சில தினங்களாக சினிமா தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது. 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதால் 2 இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் குறியீடு போட்டு வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 23-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் கரூரில் தியேட்டர்கள் திறக்கவில்லை. இந்தநிலையில் நேற்று கரூரில் உள்ள சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டன. இதையொட்டி தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருந்த படங்களின் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.
பழைய படங்கள்
கரூரில் சினிமா தியேட்டர்கள் திறந்தநிலையில் பழைய படங்கள் மட்டுமே வெளியானது. விஜய் நடித்த மெர்சல், தனுஷ் நடித்த கர்ணன், கார்த்தி நடித்த சுல்தான், த கான்ஜூரிங் போன்ற படங்கள் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 
தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒருசில தியேட்டர்களில் ஒற்றை இலக்க எண்களிலேயே ரசிகர்கள் வந்திருந்தனர்.

Next Story