கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரியலூர்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தவிட்டுள்ளது. இதையறியாமல் நேற்று கோவில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்து, கோவிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் அரசு உத்தரவின்படி நேற்று பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது தெரியாமல், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் வெளியே நின்று வழிபாடு செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story