ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
செண்பகராமன்புதூரில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி:
செண்பகராமன்புதூரில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். மையம்
செண்பகராமன்புதூர் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக குட்லின் ராய் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கி அருகே ஏ.டி.எம். மையமும் செயல்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் சத்தம் நீண்ட நேரம் ஒலித்தது. இத்தகவல் கிடைத்த வங்கி மேலாளர் குட்லின் ராய் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பார்த்தார். ஆனால் அங்கு யாரும் இல்லை.
கொள்ளை முயற்சி
இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு வாலிபர் உள்ளே வருவதும், பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பட்டனை அழுத்தியபோது திடீரென அலாரம் சத்தம் ஒலித்ததும், அந்த வாலிபா் ஓடுவதும் பதிவாகியிருந்தது.
அதை தொடர்ந்து இதுகுறித்து வங்கி மேலாளர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தது செண்பகராமன்புதூர் அருகே உள்ள கண்ணன்புதூரை சேர்ந்த இசக்கியப்பன் மகன் அரவிந்த் (வயது 21) என்பது தெரியவந்தது. உடனே அரவிந்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story