குமரியில் இன்று 73 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று 73 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 28 Aug 2021 2:51 AM IST (Updated: 28 Aug 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. 
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நேற்று 22 ஆயிரத்து 740 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தன. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 73 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோய், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்கள் அனைத்திலும் ஆன்லைனில் டோக்கன் வழங்கப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் போடப்படும். அழகப்பபுரம், மருங்கூர், கொட்டாரம், சிங்களே யர்புரி, கணபதிபுரம், முன்சிறை, கொல்லங்கோடு, ஆறுதேசம், தேங்காப்பட்டணம், கண்ணனூர், திருவட்டார், குட்டக்குழி, சுருளோடு, பேச்சிப்பாறை, கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிகள்
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், அழகியபாண்டியபுரம் அரசு தொடக்கப்பள்ளி, தெள்ளா ந்தி அரசு நடுநிலைப்பள்ளி, சீதப்பால் அரசு தொடக்கப்பள்ளி, சாமிதோப்பு என்.எம்.சி., மயிலாடிபுதூர் என்.எம்.சி., சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளி, பிலாகோடு அரசு தொடக்கப்பள்ளி, கட்டைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, முன்சிறை உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி, ஏற்றக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி, புலியூர்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளிக்கோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, குன்னக்குழி வைகுண்ட தொடக்கப்பள்ளி மற்றும் நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, களியங்காடு அரசு தொடக்கப்பள்ளி, ஐ.சி.டி.எஸ். அருகுவிளை, ஆசாரிமார் வடக்கு தெரு நூலகம், வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, வாத்தியார்விளை ஐ.சி.டி.எஸ்., கலைநகர் ஐ.சி.டி.எஸ்., வணிகர் தெரு ஐ.சி.டி.எஸ்., புன்னைநகர் ஐ.சி.டி.எஸ்., தட்டான்விளை ஐ.சி.டி.எஸ்., பொன்னப்ப நாடார் காலனி ஐ.சி.டி.எஸ் ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், சர்க்கரை நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவேக்சின் தடுப்பூசி
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, ஒழுகினசேரி அரசு தொடக்கப்பள்ளி பள்ளி, கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, முட்டம், இடைகோடு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story