கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு மினி லாரியில் கடத்திய ரூ 9 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மினி லாரியில் கடத்திய ரூ.9 லட்சம் புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மினி லாரியில் கடத்திய ரூ.9 லட்சம் புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று, ஓசூர் அட்கோ போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மினி லாரியில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 50), செந்தில் (36) என்பது தெரிந்தது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
மேலும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்துக்கு மினி லாரியில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story