இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 5:11 PM IST (Updated: 28 Aug 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்கொலை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 18). 14 மாதங்களுக்கு முன் புவனேஸ்வரி பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை சாஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45), சுரக்காய் (40) தம்பதியின் மகன் ஜோதிகுமார் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வரதட்சணை கொண்டு வரும்படி கணவர் ஜோதிகுமார், மாமியார் சுரக்காய், மாமனார் வெங்கடேசன் ஆகியோர் புவனேஸ்வரியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைது
இது குறித்து புவனேஸ்வரியின் தாய் காஞ்சனா பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்ததாக அவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் புவனேஸ்வரி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் புவனேஸ்வரியின் கணவர் ஜோதிகுமார், மாமியார் சுரக்காய், மாமனார் வெங்கடேசன் ஆகியோரை கைது செயதனர்.

புவனேஸ்வரிக்கு திருமணமாகி 14 மாதங்களே ஆவதால் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா விசாரித்து வருகிறார்.

Next Story