திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 5 நாட்கள் ஏலம்: போலீஸ் சூப்பிரண்டு


திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 5 நாட்கள் ஏலம்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 28 Aug 2021 5:35 PM IST (Updated: 28 Aug 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 5 நாட்கள் ஏலம் விடப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

மது விலக்கு வழக்குகளில்...

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 204 இரு சக்கர வாகனங்கள், 18 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 42 நான்கு சக்கர வாகனங்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி வருகிற 31-ந்தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) வரை 5 நாட்கள் காலை 10 மணி அளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

முன் வைப்பு கட்டண தொகை
வாகனங்களை ஏலம் கேட்க விரும்புபவர்கள் முன் வைப்பு கட்டண தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் விற்பனை வரியாக இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரியாக 12 சதவீதம், மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் விற்பனை வரியையும் உடனடியாக செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீடு தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகை மற்றும் திருவள்ளூர் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுத்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய முன்வைப்புத் தொகையை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story