வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு


வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு
x
தினத்தந்தி 28 Aug 2021 6:04 PM IST (Updated: 28 Aug 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு

வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகள் தானிய வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
வியாபாரிகள் மளிகை சாமான்கள் மற்றும் இறைச்சி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் வெள்ளகோவில் வாரச்சந்தையில் சிமெண்டு சாலை அமைத்து கடையில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது பணி நிறைவடைந்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையர்பொறுப்புகே.மணி முன்னிலையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இன்றுஞாயிற்றுக்கிழமை முதல் வாரச்சந்தை வளாகத்தில் வாரச்சந்தை செயல்பட உள்ளது.

-

Next Story