வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சலூன் கடைக்காரர் சாவு


வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சலூன் கடைக்காரர் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2021 8:54 PM IST (Updated: 28 Aug 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சலூன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள குருவனூரை சேர்ந்தவர் ராமசேகர் (வயது 40). இவர் கூம்பூரில் சலூன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் குருவனூரில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது இருட்டில் எதிர்பாராத வகையில் அவர் கால் தடுமாறி அங்கிருந்த 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து இரவு முழுவதும் அவர் காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். எனினும் யாரும் அந்த வழியாக வராததால் இரவு முழுவதும் அவர் படுகாயத்துடன் கிணற்றில் தவித்தார்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ராமசேகரின் சத்தம் கேட்டு அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராமசேகரை கயிறுவலை மூலம் மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story