உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியவர்களை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடியதாக கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன்(வயது 33) என்பவரை திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வரும் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை மற்றும் அம்மாசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story