பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு 6 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு 6 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது ஆட்டோ பறிமுதல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் செவலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 4 மூட்டைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
விசாரணையில் புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக திருக்கோவிலூர் அஷ்டலட்சுமி நகர் காமராஜர் தெருவை சேர்ந்த பாலு மகன் ராஜா(வயது 42), கடலூர் மெயின் ரோடு சைலோம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிமாறன்(27) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் ஆட்டோவுடன், புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள கொங்கனாமூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ரவிச்சந்திரன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story