டிரைவரை கடித்த அண்ணன்-தம்பி கைது


டிரைவரை கடித்த அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 10:24 PM IST (Updated: 28 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

டிரைவரை கடித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமேசுவரம் ராஜாராம் மகன் தங்கம் (வயது48). இவர் ராமேசுவரம் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்சை எடுக்க முயன்றபோது 2 வாலிபர்கள் வந்து உச்சிப்புளி விமான நிலையத்தில் நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த பஸ் அந்த நிறுத்தத்தில் நிற்காது என்று தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் தரக்குறைவாக பேசி முதுகில் தாக்கியதோடு பெருவிலை கடித்து படுகாயப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்வைக்காரன் ஊருணி அய்யசாமி மகன் மாரி (30), அவரின் தம்பி மணிகண்டன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story