கமுதி ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
டிரைவரை தாக்கி காரை கடத்திச்சென்ற கமுதி ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கமுதி,
டிரைவரை தாக்கி காரை கடத்திச்சென்ற கமுதி ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாடகை கார்
கமுதி அருகே மறவர் கரிசல்குளத்தை சேர்ந்த முனியசாமி மகன் மாணிக்க நாதன் (வயது31). அம்மன்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் மகன் அஜித், மரக்குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன் (25) மற்றும் பேரையூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் காளி (24) ஆகிய 4 பேரும் தென்காசியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி வாடகைக்கு காரை பிடித்துள்ளனர்.
தென்காசியில் டிராவல்ஸ் நடத்தி வரும் சுப்பிரமணி மகன் ஜோதி (45) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். வரும் வழியில் மாணிக்கநாதன் மொச்சிக்குளத்தைச் சேர்ந்த லிங்கநாதன் மகன் முத்துமணியிடம் காருக்கான வாடகை பணத்தை எடுத்துக்கொண்டு சாயல்குடி வருமாறு கூறியுள்ளார்.
கைது
ஊரை நெருங்கியதும் டிரைவர் ஜோதியிடம் வாடகை பணத்தை கொடுக்காமல் அஜித் மற்றும் மணிவண்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து டிரைவரின் கையை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளார். மேலும் அவரிடம் இருந்த ரூ.5000 மதிப்புள்ள செல்போன், ரூ.4,500 ஆகியவற்றை பறித்துக்கொண்டு காரை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் டிரைவர் ஜோதி அளித்த புகாரின்பேரில் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ரவுடியான மாணிக்க நாதன் மீது கோவிலாங்குளம் சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
7 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் மாணிக்கநாதன் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டி பரமக்குடி நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து பரமக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகை காரை கடத்திச் சென்ற மாணிக்க நாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மாணிக்கநாதன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story