மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2021 10:29 PM IST (Updated: 28 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021-2022-ன் கீழ் மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்க மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஒரு ஹெக்டரில் ரூ.6 லட்சம் செலவு செய்து மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன்குஞ்சு வளர்ப்பு செய்திட உள்ளீட்டு செலவினத்திற்கான தொகை ரூ.1 லட்சம் ஆகும். இதில் 40 சதவீதம் மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.  

இத்திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், எண்-10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்பும்-605401 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04146-259329 என்ற மீன்வள உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story