செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது


செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 5:08 PM GMT (Updated: 2021-08-28T22:38:03+05:30)

செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
கமுதி பாக்குவெட்டி கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் சிவன் (வயது48). இவர் பட்டுக்கோட்டை சென்று உறவினரை பார்த்துவிட்டு ராமநாதபுரம் வந்தார். பஸ்நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து செல்போன் ரூ.500 பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து சிவன் அளித்த புகாரின் அடிப் படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (20), மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.

Next Story