வீடுபுகுந்து நகை பறித்தவர்கள் கைது
வீடுபுகுந்து நகை பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 50) இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்தி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நர்ஸ் சாந்தி என்பவர் ஐஸ்வர்யாவுக்கு ஊசி போடுவதற்காக அங்கு வந்திருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி மீனா, சாந்தி, ஐஸ்வர்யா ஆகிய மூன்று பேரிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காரைக்குடி வடக்கு போலீசார் முத்து பட்டினத்தைச் சேர்ந்த ராமு (வயது 25), திருப்பத்தூரை சேர்ந்த சிவா (26) ஆகிய 2 பேரை கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளை மீட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story