கார்கள் நேருக்குநேர் மோதல்


கார்கள் நேருக்குநேர் மோதல்
x
தினத்தந்தி 28 Aug 2021 10:54 PM IST (Updated: 28 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கார்கள் நேருக்குநேர் மோதயதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருப்புவனம், 
கல்லல் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது48). இவர் தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் மதுரை சென்றுவிட்டு ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தாராம். காரை தர்மலிங்கமே ஓட்டி வந்துள்ளார். காரில் இவரது மனைவி தேவி, மகன் ஆகியோர் வந்துள்ளனர். சிவகங்கையில் இருந்து மதுரைக்கு ஒரு கார் வந்துள்ளது. இந்த காரை மதுரையை சேர்ந்த ஹரி (வயது27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். படமாத்தூர் விலக்கு அருகே வரும்போது 2 கார்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தர்மலிங்கத்தின் மனைவி தேவி மற்றும் மகன் ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தர்மலிங்கம் பூவந்தி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன், மதுரையைச் சேர்ந்த டிரைவர் ஹரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story