ஜோலார்பேட்டை அருகே; குடிபோதையில் மாடி வீட்டின் மீது ஏறிய தொழிலாளிக்கு அடி, உதை


ஜோலார்பேட்டை அருகே; குடிபோதையில் மாடி வீட்டின் மீது ஏறிய தொழிலாளிக்கு அடி, உதை
x
தினத்தந்தி 28 Aug 2021 11:42 PM IST (Updated: 28 Aug 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் மாடி வீட்டின் மீது ஏறிய தொழிலாளிக்கு அடி, உதை விழுந்தது.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். 

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டை சுற்றி சூழ்ந்து அவரை மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்தே இருந்தார். 

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, மாடி வீட்டின் சுவர் மீது அமர்ந்திருந்தவரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் கீழே இறங்கி வந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

மதுபோதையில் இருந்த அவரிடம் விசாரித்தபோது, ஜோலார்பேட்டை அருகில் உள்ள பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ரமேஷ், கட்டிட வேலை செய்து வருபவர் என்று தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story