4 கடைகளில் ஷட்டரை இழுத்து நூதன முறையில் பொருட்கள் கொள்ளை


4 கடைகளில் ஷட்டரை இழுத்து நூதன முறையில் பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 28 Aug 2021 6:21 PM GMT (Updated: 2021-08-28T23:51:58+05:30)

சோளிங்கரில் அடுத்தடுத்து 4 கடைகளின் ஷட்டர்களை இழுத்து மர்மநபர்கள் பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சோளிங்கர்

சோளிங்கரில் அடுத்தடுத்து 4 கடைகளின் ஷட்டர்களை இழுத்து மர்மநபர்கள் பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

4 கடைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர் கடைகள், மர சாமான் கடை ஆகிய கடைகள் அடுத்தடுத்து உள்ளன. 
நேற்று முன்தினம் வேலை நேரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு வந்த மர்மநபர்கள் 4 கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கடைகளின் பூட்டை உடைகாமல் நூதனமான முறையில் ஷட்டரை நூதன முறையில் ஆள் நுழையும் அளவுக்கு மேலே தூக்கி கடைக்குள் புகுந்துள்ளனர். கடைக்குள் இருந்த ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

விசாரணை

கடைகளின் உரிமையாளர்கள் இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் குற்றப்பிரிவு உதவி இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த கடைகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.

வடமாநில கொள்ளையர்களா

இதில் ஒரு கேமராவில் வடமாநில கொள்ளையர்கள் போன்று தெரிவதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். எனவே இச்சம்பவங்களில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story