விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2021 11:59 PM IST (Updated: 28 Aug 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டனர்.

திருமயம்:
திருமயம் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 46). கொத்தனார். உறவினர் வீட்டு திருமணத்திற்கு சீர்வரிசை செய்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கருப்பையா விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story