சட்டவிரோத செயல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் போலீ்ஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தகவல்


சட்டவிரோத செயல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் போலீ்ஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2021 12:03 AM IST (Updated: 29 Aug 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கூறினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தெரிவிக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்க ‘வாட்ஸ்அப்’ எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த துண்டுப்பிரசுரங்களை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, கஞ்சா, குட்கா, லாட்டரி, சாராய விற்பனை, காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் உள்ளிட்டவை), ரவுடியிசம், காவல்துறை அதிகாரிகள், போலீசார் லஞ்சம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் என்னிடம் (காவல் கண்காணிப்பாளர்) நேரடியாக தெரிவிக்க செல்போனிலோ அல்லது 7530026333 என் வாட்ஸ்அப் எண் மூலமாகவோ தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். முக்கிய தகவலாளிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளிக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் தியான மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், துணை சூப்பிரண்டு பூரணி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story