சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 12:13 AM IST (Updated: 29 Aug 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை,
சிறுமி திடீர் மாயம்
குளித்தலை அருகே உள்ள கிராமம் ஒன்றில் தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி கடந்த மாதம் திடீரென்று மாயமானார். 
இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மாயமான சிறுமியை தேடிவந்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
இந்தநிலையில் கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கருப்பையா (வயது 19) என்பவர் அச்சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கருப்பையாவுடன் இருந்த அச்சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் சிறுமி மாயமான வழக்கை, குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை போலீசார் கைது செய்தனர்.

Next Story