15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது

திருச்சி, ஆக. 29-
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவ ஊழியர்கள் அவரை பற்றி விசாரித்ததில் அவர் 15 வயது சிறுமி என தெரியவந்தது. பின்னர் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது பற்றி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 26) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது தெரிய வந்தது. சிறுமிக்கு 15 வயதே ஆவதால் மகேஸ்வரனை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் சட்ட பிரிவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story