ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் விபத்தில் பலி


ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 1:17 AM IST (Updated: 29 Aug 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கிய, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இறந்தார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் மேலகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 72). மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கீழப்பழுவூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் கீழப்பழுவூரில் இருந்து மேலகருப்பூர் செல்லும் சாலையில் கீழப்பழுவூர் எல்லையில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த கார், அவரது ெமாபட் மீது மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story