வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது


வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 1:36 AM IST (Updated: 29 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

பழவூர் அருகே வீடு புகுந்து பணம், நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

வடக்கன்குளம்:
பழவூர் அருகே சங்கனாபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரை சேர்ந்த ராமையா (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.84 ஆயிரம் ரொக்கம் மற்றும் 9 பவுன் நகை மீட்கப்பட்டது. 

Next Story