கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில், மதுரை சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோ தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் சீலன் முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் மரிய ஆரோக்கியதாஸ் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களுக்கு, அவர்கள் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலிலும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலிலும் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிறிஸ்தவ மக்கள் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story