தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை


தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை
x
தினத்தந்தி 29 Aug 2021 2:38 AM IST (Updated: 29 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

அரக்கல்கோடுவில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன்: அரக்கல்கோடுவில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

கொலை

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா மல்லாபுரா கிராமத்தையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, வனப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அரக்கல்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரை, யாரோ மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. 

மைசூரு ஆட்டோ டிரைவர்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 44) என்பதும், அவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது போன்ற எந்த தகவலும் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. 

இதுகுறித்து அரக்கல்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீசை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story