சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு நோய் தொற்று: கொரோனாவுக்கு 3 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 3 பேர் பலியானார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 3 பேர் பலியானார்கள்.
62 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதிதாக 62 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 12 பேர், ஓமலூரில் 9 பேர், மேட்டூரில் 6 பேர், சங்ககிரி, சேலம் ஒன்றியம் பகுதியில் தலா 5 பேர், கொளத்தூரில் 4 பேர், எடப்பாடி, மகுடஞ்சாவடியில் தலா 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 62 பேருக்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.
3 பேர் பலி
அதேசமயம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 105 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆஸ்பத்திரிகளில் 948 பேர் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர்கள் திடீரென உயிரிழந்தனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,629 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story