சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை பணியிடை நீக்கம்


சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 Aug 2021 11:14 PM GMT (Updated: 28 Aug 2021 11:14 PM GMT)

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கருப்பூர்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியை நாஷினி. அவரை நேற்று முன்தினம் திடீரென துணைவேந்தர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து துணைவேந்தர் ஜெகநாதன் கூறும் போது, ஊட்டச்சத்து துறை தலைவர் பேராசிரியை நாஷினி மீது முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த புகார் விவரத்தை தெரிவிக்க இயலாது. புகார் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணையின் அடிப்படையில் அளிக்கப்படும் அறிக்கையில் அவர் தவறு செய்துள்ளாரா? இல்லையா? என்பது தெரியவரும் என்றார்.

Next Story