நாமக்கல்லில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


நாமக்கல்லில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 Aug 2021 9:09 AM GMT (Updated: 29 Aug 2021 9:09 AM GMT)

நாமக்கல்லில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் 6 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட உள்ளது. அதன்படி 3 மற்றும் 4-வது வார்டு பொதுமக்களுக்கு சின்ன முதலைப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 1 மற்றும் 6-வது வார்டு பொதுமக்களுக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்படுகிறது. 
காவெட்டிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 18-வது வார்டு மக்களுக்கும், போதுப்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 17-வது வார்டு மக்களுக்கும், சந்தைப்பேட்டை புதூர் பிள்ளையார் கோவில் சாவடியில் 29, 35 மற்றும் 36-வது வார்டு மக்களுக்கும் மற்றும் கொசவம்பட்டி பிள்ளையார் கோவிலில் 32 மற்றும் 33-வது வார்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இன்று ஒரே நாளில் நாமக்கல் நகரில் 6 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் 1,900 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Next Story