அதியமான்கோட்டை அருகே 8 மாத பெண் குழந்தை மர்ம சாவு உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை


அதியமான்கோட்டை அருகே 8 மாத பெண் குழந்தை மர்ம சாவு உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே மர்மமாக இறந்த 8 மாத பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே ஏரிகோடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார், லாரி டிரைவர். இவரது மனைவி சாலம்மாள் (21). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இதழினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமார், சாலம்மாள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story