3 நாட்களில் 400 மாணவர்கள் சேர்ந்தனர்


3 நாட்களில் 400 மாணவர்கள் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 29 Aug 2021 4:12 PM IST (Updated: 29 Aug 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

3 நாட்களில் 400 மாணவர்கள் சேர்ந்தனர்

உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2021 2022ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 26ந் தேதி தொடங்கியது. இந்த கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முதல்நாளில்சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 2 நாட்கள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.3 நாட்கள் நடந்த இந்த கலந்தாய்வைத்தொடர்ந்து மொத்தம் 400 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
 முதல்கட்ட கலந்தாய்வின் 4வது நாளான நாளை செவ்வாய்க் கிழமை  கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேல்நிலைப் பள்ளி வகுப்பில்அறிவியல் பாடப்பிரிவுகளில்பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசை ப்பட்டியலில் வரிசை எண் 1முதல்250 வரையிலான இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நாளை காலை 9.30 மணிக்கும், வரிசை எண் 251 முதல் 500 வரையிலான இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் கலந்தாய்நடக்கிறது.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்தார்.



Next Story