மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்


மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 Aug 2021 4:22 PM IST (Updated: 29 Aug 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

திருப்பூர், 
திருப்பூர்  தென்னம்பாளையம் சந்தை உள்ளது. இதன் உள்ளே மீன் சந்தை மற்றும் காய்கறி சந்தைகளும் உள்ளன. சந்தைக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும். 
கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் காய்கறிகள் உள்ளிட்டவைகள் சந்தைக்கு முன்புறம் மற்றும் பின்புற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்கள் மீன் சந்தையிலும், சந்தை அருகே உள்ள பகுதிகளிலும் என விற்பனை செய்யப்பட்டன. 
இவற்றை வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கி சென்றனர். இதில் பாறை மீன் ஒரு கிலோ ரூ.120க்கும், கட்லா ரூ.160க்கும், சங்கரா மீன் ரூ.220க்கும், ரோகு ரூ.130க்கும். 
விளாங்கு ரூ.120க்கும், ஜிலேபி மீன் ரூ.80க்கும், வஞ்சிரம் ரூ.650க்கும், மத்தி ரூ.160க்கும், இறால் ரூ.420க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலை முதலே மதியம் வரை பலரும் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றதால், சந்தை பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 
-


Next Story