பெயர்ந்து கிடக்கும் கால்வாய் கரை சிலாப்பு
உடுமலை பி.ஏ.பி.கால்வாயில் கரையின் சிலாப்புகள் பெயர்ந்து கால்வாய்க்குள் கிடக்கின்றன.
உடுமலை
உடுமலை பி.ஏ.பி.கால்வாயில் கரையின் சிலாப்புகள் பெயர்ந்து கால்வாய்க்குள் கிடக்கின்றன.
கால்வாய்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் பி.ஏ.பி திருப்பூர், கோவை மாவட்டங்களில் மொத்தம் சுமார் 3 லட்சத்து 77ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த பாசன பகுதிகள் 6 மாதத்திற்கு ஒரு மண்டலம் வீதம்
4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலபாசனத்தின் போதும் 135 நாட்களில், தண்ணீர் இருப்பைப்பொறுத்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு, உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
அதன்படி 4வது மண்டலபாசனத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டு, அதில் முதல் சுற்று தண்ணீர்இந்த மாதம் திறந்து விடப்பட்டது. உடுமலை கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.இனி சில நாட்களில் 2வது சுற்றுக்கான தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
சிலாப்புகள்
இந்த நிலையில் உடுமலை அருகே வெஞ்சமடை பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் யு.கே.பி.நகர் அருகில் உள்ள பாலத்திற்கு அருகே கால்வாயின் கரையில் பதிக்கப்பட்டு சிமென்ட் கலவை பூசப்பட்டிருந்த சிலாப்புகள் பெயர்ந்து கால்வாய்க்குள் கிடக்கின்றன.அவை அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன.சிலாப்புகள் பெயர்ந்து கிடப்பதால் அந்த இடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
---
உடுமலை யு.கே.பி.நகர் அருகே பி.ஏ.பி.உடுமலை கால்வாயின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டிருந்த சிலாப்புகள் பெயர்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்
---
Image1 File Name : 5931361.jpg
----
Reporter : A. Stephen Location : Tirupur - Udumalaipet - Udumalai
Related Tags :
Next Story