சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு


சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 29 Aug 2021 5:10 PM IST (Updated: 29 Aug 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கூடல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 48). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் பலராமன் அதே பகுதியை சேர்ந்த சேகர், வேலு, தேவராஜ் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் பஜாரில் உள்ள புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான பழைய சுவர் இடிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.

சாவு
அப்போது திடீரென சுவர் இடிந்து பலராமன் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story