முருங்கைக்காய் கொள்முதல்
முருங்கைக்காய் கொள்முதல்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதையொட்டி முருங்கைக்காய் கொள்முதல் மையம் செயல்படுகிறது. இந்த கொள்முதல் மையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 60 விவசாயிகள் 15 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12 க்கும், கரும்பு முருங்கை ரூ.17க்கும், மர முருங்கை ரூ.10க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, ஒட்டசத்திரம் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story