செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2021 6:47 PM IST (Updated: 29 Aug 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் வருவாய்துறை அதிகாரிகளுடன் சென்றனர். வாக்குச்சீட்டுகளை இங்கு பாதுகாப்பாக வைக்க முடியுமா? வாக்கு எண்ணிக்கை பணி நடத்துவதற்கு ஏற்ற இடம்தானா? என்பது குறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.

அப்போது திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் அவர்கள் திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

Next Story