அரக்கோணம் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் நேற்று அரக்கோணம் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரக்கோணம்
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் நேற்று அரக்கோணம் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணிபேட்டை மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று அரக்கோணம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களிலும் ஆய்வு செய்தார்.
கிருமி நாசினி
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வி துறை அலுவலர்களுக்கும் கொரோனோ வழி காட்டு முறைகளை கடை பிடித்தல் குறித்து ஆலோசனைகளை தெரிவித்தார். மேலும், நகராட்சி ஆணையாளரிடம் பள்ளி பகுதி சுற்றிலும் தினமும் நகராட்சி ஊழியர்களை கொண்டு தூய்மை செய்து, கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து நகரில் நடைபெற்ற கொரோனோ தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையாளர் ஆசிர்வாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story