அரசு உதவித்தொகை பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்


அரசு உதவித்தொகை பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்
x
தினத்தந்தி 29 Aug 2021 9:16 PM IST (Updated: 29 Aug 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

அரசு உதவித்தொகை பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் சாய் சரவணன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

வில்லியனூர், ஆக.
அரசு உதவித்தொகை பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் சாய் சரவணன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
உதவித்தொகை பெற ஆணை
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஊசுடு தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி, திருநங்கைகள் ஆகிய பயனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பத்துக்கண்ணுவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
இதில்    தொகுதி எம்.எல்.ஏ.வும்,   அமைச்சருமான சாய் சரவணன் குமார் கலந்துகொண்டு   பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான   ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் 300 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை மற்றும் இலவசமாக சர்க்கரை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டனர்.
விழாவில் அமைச்சர் சாய் சரவணன்குமார் பேசியதாவது:-
உதவிகள் செய்ய தயார்
கடந்த காலங்களை போல் உதவித்தொகை    பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் யாராவது பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம். என்னிடம் வந்து கூறுங்கள் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான பயனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டும்.   அக்கம் பக்கத்தில் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக வரமுடியவில்லை என்றால்        எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். 
வீடுதேடி வந்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகளை செய்கிறேன். போலியாக யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் அசோகன், துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story