வாணியம்பாடி அருேக மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை விரைவில் சீரமைக்க வேண்டும். மலைக் கிராம மக்கள் கோரிக்கை
வாணியம்பாடி அருேக மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிைவ விரைவில் சீரமைக்க வேண்டும், என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருேக மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிைவ விரைவில் சீரமைக்க வேண்டும், என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பாதை
வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா செல்ல மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாகப் பயணித்தால் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வெலதிகமணிபெண்டா, சிந்தகாமணிபெண்டா, மாதகடப்பா, வீரணமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கும் மற்றும் குப்பம் பகுதிக்கும் செல்லலாம். மலைப்பாதை வழியாக 5-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மினி பஸ்கள், லாரிகள், கார்கள், சரக்கு வேன்கள் ஆகியவை சென்று வந்தன.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த விளைப்பொருட்களை 20 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ள வாணியம்பாடி உழவர்சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
மலைக் கிராமங்களில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. 9-ம் வகுப்பு முதல் மேல்நிலை மற்றும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றாலும், அனைத்து மருத்துவச் வசதிகளுக்கும் மலையில் இருந்து கீழே இறங்கி 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாணியம்பாடி நகருக்கு தான் வர வேண்டும்.
போக்குவரத்துத் துண்டிப்பு
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக-ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 4-வது கொண்டைஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் அங்கு விழுந்து கிடந்த கற்களை அகற்றி, துண்டிக்கபட்டு இருந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மண்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக சாலையை சரி செய்தனர். அந்த வழியாக இரு சகக்ர வாகனங்கள் மட்டுமே சென்று வர முடியும். பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்துச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
மலையில் 50 அடி ஆழத்துக்குக் கீழே இருந்தே தடுப்புச்சுவர் எழுப்பி மலைப்பாதை முழுவதுமாகச் சரி செய்த பின்னரே வழக்கம்போல் வாகனங்களை இயக்க முடியும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்துச் சேவை நிறுத்தி 2 மாதங்களை கடந்து விட்டது. இன்னும் மலைப்பாதையைச் சீரமைக்கவில்ைல.
இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பல்வேறு வேலைகளுக்காக மலைக் கிராமங்களில் இருந்து மலைப்பாதை வழியாகப் பயணித்து வாணியம்பாடி நகர பகுதிக்கு வந்து செல்ல முடிகிறது. கூலித்தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சாகுபடி ெசய்து வாணியம்பாடி உழவர்சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் விளைப்பொருட்கள் நிலங்களிலேயே அழுகி விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வருகிற 1-ந்தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மலைப்பாதை சீரமைக்கப்படாததால் மலைக்கிராமங்களில் இருந்து வாணியம்பாடிக்கு 9-ம் வகுப்புக்குமேல் படிக்கச் செல்லும் மாணவ-மாணவிகளின் கல்வி கேள்வி குறியாக உள்ளது. மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் முடங்கி கிடப்பதாக மலைக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக நிதி ஒதுக்கி மலைப்பாதையை விரைவில் சீரமைத்து போக்குவரத்துச் சேவைைய தொடங்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story