தேவாரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


தேவாரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:23 PM IST (Updated: 29 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

தேவாரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேவாரம்:
தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பிரதீப்குமார் (வயது 19) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து பிரதீப்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story