பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டம்


பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2021 4:57 PM GMT (Updated: 2021-08-29T22:29:10+05:30)

பென்னாகரம் அருகே பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்,

பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி ஊராட்சி எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர். ஆனால் இதுநாள் வரையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

நாற்று நடும் போராட்டம்

இந்தநிலையில் பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி பெண்கள் நேற்று  சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தார்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை  கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக பெண்கள் கூறினர்.

Next Story