வேலூர் மாவட்டத்தில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்து முன்னணி கோட்ட தலைவர் பேச்சு


வேலூர் மாவட்டத்தில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்து முன்னணி கோட்ட தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 29 Aug 2021 5:01 PM GMT (Updated: 29 Aug 2021 5:01 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் அலமேலுமங்காபுரத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட செயலாளர் ராமன், மாநகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:- 

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வேலூரில் 12-ந் தேதி விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கும் ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைக்கிறார். சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

இந்து முன்னணி சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 12 இடங்களில் ஊர்வலம் நடைபெற உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்து செயல்படுகின்றன. முழுஅளவில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனவே விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்துக்களின் வழிபாட்டு உரிமையை அரசு பறிக்ககூடாது. வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், வேலூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story