திருவண்ணாமலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகளை வெட்டிய கொடூரம்
திருவண்ணாமலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகளை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சாரோன் கரியான்செட்டி தெருவை சேர்ந்தவர் பழனிராஜன் (வயது 33). விவசாயியான இவர் மாட்டு பண்ணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் உள்ள காலி நிலத்திற்கு அழைத்து சென்று உள்ளார்.
பின்னர் அதில் இருந்து ஒரு சினை பசு உள்ளிட்ட 2 பசுமாடுகள் அருகில் இருந்த நிலத்திற்கு சென்று மேய்ந்து உள்ளது.
அப்போது அங்கிருந்தவர்கள் அந்த 2 பசுமாடுகளையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், மாடுகளுக்கு முதுகு, வால் உள்ளிட்ட பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பழனிராஜன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story