தீக்குளித்தவர் சாவு
பரமக்குடி அருகே தீக்குளித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சின்ன நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது50). இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். சின்ன நாகாச்சி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மன விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story