வேலூர் அருகே அனுமதியின்றி பார் நடத்திய 2 பெண்கள் கைது


வேலூர் அருகே அனுமதியின்றி பார் நடத்திய 2 பெண்கள் கைது
x

அனுமதியின்றி பார் நடத்திய 2 பெண்கள் கைது

வேலூர்

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் நேற்று வேலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வேலூர் சலவன்பேட்டையில் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுவிற்ற சரவணன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரை அடுத்த தெள்ளூர் கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே இயங்கிய மதுபான பாரில் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அதில், அனுமதியின்றி பார் நடத்துவது தெரியவந்தது. 
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சாந்தி (45), விஜயா (48) ஆகியோரை போலீசார் கைது செய்து, மதுபான பார் இயங்கிய கடையை மூடினார்கள்.

Next Story