பரமத்தியில் லாரி மோதி தொழிலாளி பலி-டிரைவர் கைது


பரமத்தியில் லாரி மோதி தொழிலாளி பலி-டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 6:02 PM GMT (Updated: 2021-08-29T23:32:54+05:30)

பரமத்தியில் லாரி மோதி நடந்து சென்ற தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர்:
தொழிலாளி பலி
ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று பரமத்தியில் இருந்து கீழ் பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பெங்களூரு நோக்கி பேப்பர் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் பாண்டியன் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
டிரைவர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தநாதனை (43) கைது செய்தனர். பரமத்தியில் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story