திருப்பத்தூரில் பராமரிப்பின்றி கிடக்கும் நகராட்சி பூங்கா
திருப்பத்தூரில் பராமரிப்பின்றி கிடக்கும் நகராட்சி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் பராமரிப்பின்றி கிடக்கும் நகராட்சி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பு இல்லாத நகராட்சி பூங்கா
திருப்புத்தூர் நகரின் மையப் பகுதியில் நகராட்சிக்கு எதிரே கலெக்டர் அலுவலகம் அருகில் நகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.
ஆனால் இங்கு குழந்தைகள் விளையாடும் சறுக்கு உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. அதேபோல் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. செயற்கை நீரூற்று முழுவதும் மோசமாக உள்ளது. சிறுவர்கள் விளையாடக் கூடிய சறுக்கில் ஆங்காங்கே ஓட்டைகள் உள்ளது. இதனால் சிறுவர்கள் அந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
இதனால் பூங்காவுக்கு வரும்பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் நலன் கருதி பழுதடைந்த பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story